☰
×

 நான் வாக்கு சேகரிக்க வரவில்லை நியாயம் கேட்டு வந்திருக்கிறேன் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

 

மக்கள் மத்தியில் வலம் வந்த தி.மு.க தலைவருக்கு, பாதையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவியும், கட்சி கொடிகளை ஏந்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின்,  நான் வாக்கு சேகரிக்க வரவில்லை நியாயம் கேட்டு வந்திருக்கிறேன். மக்கள் கட்டிய வரிப்பணத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் செல்லாததாக ஆக்கிவிட்டார்கள். மக்களிடம் வாக்கிய வாக்குகளை வேறு கட்சியிடம் விற்க மாட்டார் தி.மு.க வேட்பாளர் சுகன்யா.

பெட்டி பாமா, பல்டி பாமா என மக்கள் சத்தியபாமாவை அழைக்கின்றனர். இந்த உருவத்தை வைத்துக் கொண்டு எப்படி பல்டி அடிக்கிறார் என்று தெரியவில்லை. பெரும்பான்மையை பெற முடியாத, மக்கள் ஆதரவில்லாதவர் முதலமைச்சர் விஜய். படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வச்ச முதலமைச்சர், குதிரை பேரம் பேசி இடைத்தேர்தலை உருவாக்கி, இப்ப ஜனநாயகத்தின் வில்லனாக மாறி இருக்கிறார்.

ஆணவத்தின் உச்சத்தில் மக்களின் வாக்குரிமையை கொச்சைப்படுத்தும் முதலமைசர் விஜய்க்கு தாராபுரம் மக்கள் கொடுக்கும் அடி, பாடமாக மரண அடியாக இருக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் சார் பேச மாட்டேங்குறீங்க? என்ன சார் பயம்? பா.ஜ.க-னா அவ்ளோ பயமா சார்? சீஃப் மினிஸ்டரா நடந்துக்கோங்க. சீப் மினிஸ்டரா நடந்துக்காதீங்க. 

த.வெ.க அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் மாஃபியா. அதில், இன்வெஸ்டிங் பார்ட்னர், ஒர்க்கிங் பார்ட்னர் என ஒரு பெரிய கும்பலே இருக்கிறது. தமிழ்நாட்டை அம்பேல் ஆக்க வேண்டும் என்பது தான் அந்த கார்ப்பரேட் மாஃபியாவின் டார்கெட் மின்வெட்டால் மக்களின் நிம்மதியை கெடுத்துவிட்டு, முதலமைச்சர் மட்டும் பண்ணையார் மாதிரி பட்டு வேட்டி சட்டைல பந்தா பண்ணிட்டு இருக்காரு. ஒவ்வொரு கிழமைக்கு ஒரு டிரஸ் போடணும்னு ஜோசியர் சொல்லிருக்காரு.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் தொகுதிக்குள் நுழையவே முடியவில்லை. இது வேட்பாளருக்கு எதிர்ப்பு அல்ல, போலி பிம்பத்தை காட்டிய முதலமைச்சருக்கு எதிர்ப்பு. பொதுவாக ஒரு ஆட்சியோட 6 மாதங்கள் ஹனிமூன் பீரியட்னு சொல்வார்கள். ஆனா நாலே மாதத்தில் த.வெ.க-வுக்கு வாக்களித்தவர்கள் இப்போ புலம்பிட்டு இருக்கிறார்கள். உள்ளூர்ல பேரு ரிப்பேர் ஆகுதுணு தெரிஞ்சதும் கோடிக்கணக்கில் செலவு பண்ணி வட மாநிலங்களில் டள்பதி விஜயின் சாதனைகள்னு சொல்லி செய்திகளை பரப்புறாங்க” என்றார்.

தாராபுரம் மக்களிடம் வாக்கு கேட்டு மட்டுமல்ல நியாயம் கேட்டு வந்திருக்கிறேன்

பெட்டியை கொடுத்தது யாரு.?
பெட்டியை வாங்கியது யாரு.?

தலைவர் கேட்ட உடனே
வந்த பதில்🔥🔥🔥 pic.twitter.com/u59dvT0vqG

— Kavitha T (@KavithaT142006) October 2, 2026