×

ஏண்டா அவசரப்படுற...ஃபுல் மீல்ஸ் கொடுத்துதான் அனுப்புவேன்!' - 'சீயான் 63' டைட்டில் அறிவிப்பு..!!

 

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் படமொன்று நடிக்கவுள்ளார். விக்ரம் – ஆனந்த் ஷங்கர் கூட்டணி இணைந்து ‘இருமுகன்’ படத்தில் பணிபுரிந்துள்ளது. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய படத்திலும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறது.

மீண்டும் இந்தக் கூட்டணி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

வீர தீர சூரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விக்ரம் தற்போது தனது 63-வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘இருமுகன்’ பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். படத்திற்கு தற்காலிகமாக ‘சியான் 63’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

மலையாளத்தில் 'சர்வம் மாயா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரியா ஷிபு, இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே மற்றும் ஷம்மி திலகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரியா ஷிபு, 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விக்ரமின் 63வது படத்தின் டைட்டிலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், ரியா ஷிபு உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பவர் ஹவுஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில், விக்ரம் சமையல்காரராக அறிமுகமாகி பின் ஆக்ஷன் காட்சிகளுக்கான வசனம் பேசுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/IKEUlp3JIKk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/IKEUlp3JIKk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">