×


தனது பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை பெற்ற நடிகர் சிரஞ்சீவி

 

நடிகர் சிரஞ்சீவியின் ஒப்புதலின்ரி, அவரது பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை வணிகப் பயன்பாடு, தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த தடை விதித்து ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் தனது பலர் தனது பெயர், புகைப்படத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதாக நடிகர் சிரஞ்சீவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், தனது புகைப்படங்கள் மற்றும் திரைப்படப் பெயர்களை பல ஆன்லைன் தளங்கள் டி-சர்ட்கள், போஸ்டர்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யப் பயன்படுத்துவதாகவும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மனுவை விசாரித்த ஹைதராபாத் நீதிமன்றம், நடிகர் சிரஞ்சீவியின் புகைப்படம், பெயர், குரல் ஆகியவற்றை அவருடைய அனுமதியின்றி தனிப்பட்ட (அ) வணிக ரீதியில் பயன்படுத்த தடை விதித்தது. இ-காமர்ஸ் கடைகள், யூடியூப் சேனல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா தளங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்ற சிரஞ்சீவி, தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராவார். 1978 முதல் நடிப்பில் அசத்திவரும் இவர், சிறிது காலம் அரசியலிலும் இருந்தார்.