Hwashin, Seoyon நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ரூ.1,370 கோடி முதலீடு
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு பெரிய விவாதம் போய்க்கொண்டிருந்தது. Hyundai, Kia நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் 3 தென் கொரிய நிறுவனங்களான Hwashin, Seoyon, Iwamet ஆகியவை ரூ.1,614 கோடி முதலீட்டை ஆந்திராவின் அனந்தபூரில் செய்ய MoU போட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இதை வைத்து எதிர்க்கட்சிகள் "TVK அரசு முதலீடுகளை தவறவிட்டது" என்று குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்த பொய் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் Hwashin மற்றும் Seoyon நிறுவனங்கள், தமிழ்நாடு அரசு மீது தங்களுக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. அதன்படி, இந்த இரு நிறுவனங்களும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்திலேயே ரூ.1,370 கோடி புதிய முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. ஆந்திராவுக்கு சென்றது ஒரு பக்கம் Kia-வை நம்பி இருக்கும் நிறுவனத்தின் கட்டாயம் என்றால், தமிழ்நாட்டில் Hwashin, Seoyon போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆண்டுதோறும் தங்கள் கால்தடத்தை விரிவாக்கம் செய்வது தான் தமிழகத்தின் பலம். புது அரசு கொஞ்சம் செட்டில் ஆகட்டும், முதலீடுகள் தானாக வரும் என்பதற்கு இந்த ரூ.1,370 கோடி முதலீடு தான் சிறந்த உதாரணம்.