×

கள்ளக்காதலியை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய கணவன்- துடிதுடித்த அப்பாவி 3 வயது குழந்தை

 

ஆரணி அருகே கள்ளகாதலி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போது 3வயது குழந்தை மீது விழுந்து தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தப்பியோடி கள்ளகாதலனை சந்தவாசல் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விளாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா(55). இவர் ஜெயம்மாள் என்ற மனைவியுடன் வாழ்ந்த வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம்மாள் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். இதனால் ராஜா தனிமையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றன. மேலும் அதே கிராமத்தை சேர்ந்த சின்னபாப்பா(50) தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது திவ்யா இனியா என்ற 2 மகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராஜாவி- சின்னபாப்பா இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ள காதலாக மாறியது. பல இடங்களில் இருவரும் தனிமையில் இருந்துள்ளதாகவும் நாளடைவில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சின்னபாப்பா மூத்த மகள் திவ்யாவிற்கு திருமணமாகி சந்தவாசலில் தனது கணவர் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் கடந்த சில தினங்களாக சின்னபாப்பா தனது மூத்த மகள் திவ்யாவுடன் தங்கி வந்துள்ளார். இதனால் கள்ளகாதலன் ராஜா அடிக்கடி வந்து தன்னுடன் வாழ வரும்படி வற்புறுத்தியுள்ளார். இதில் கள்ளகாதலி சின்னபாப்பா வர மறுத்துள்ளதால் ஆத்திரமடைந்த கள்ளகாதலன் நேற்று மாலை திவ்யா வீட்டின் வெளியே சின்னபாப்பா உட்கார்ந்து கொண்டிருந்ததை நோட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீச முயன்றார்.


அப்போது தவறுதலாக அருகில் சின்னபாப்பா பேத்தி மீது பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்தது. இதில் தீக்காயங்களுடன் சிறுமி படுகாயமடைந்தார். பின்னர் சின்னபாப்பா அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனையடுத்து சின்னபாப்பா மகள் திவ்யா சந்தவாசல் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார் கள்ளகாதல் தொடர்பாக கள்ளகாதலி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்று 3 வயது குழந்தை மீது வீசி படுகாயமடைந்த சம்பவத்தில் தலைமறைவான ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.