×

தனக்கு ஹெச்.ஐ.வி உறுதியானதால் கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கொலை செய்த வாலிபர்

 

கரூரில், மனைவி மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற நிலையில் தற்போது  மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார்.

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த செல்வகணேஷ். இவர் தென்காசி பகுதியை  சேர்ந்தவர். 20 வருடங்களுக்கு முன்பு கரூர் வந்த இவர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6 ஆண்களுக்கு முன்பு  கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரதிபாலா ( 5) என்ற பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில், தற்போது மனைவி கல்பனா 3 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சைக்காக இரத்த பரிசோதனை செய்த போது எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்ததாகவும், இதனால், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இது சமுதாயத்தில் தெரிந்தால் அவமானம் என தன்னை மட்டுமல்ல தனது மனைவி, குழந்தைகள் அனைவரையும் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என அச்சமடைந்த செல்வகணேஷ் தனது மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வெங்கமேடு போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.