×

மனைவியின் கள்ளக்காதலனை கழுத்தை கிழித்து கொலை செய்த கணவர்

 

விழுப்புரம் அருகே புதுச்சேரி எல்லைபகுதியில் திருமணத்திற்கு மீறி மனைவியுடன் இருந்த இளைஞரை கணவர் மது அருந்த அழைத்து கழுத்தை கிழித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீகாரிலுள்ள முஜ்ஜையில்பல்பூரை சார்ந்த சுராஜ்குமார் தனது குடும்பத்துடன் தமிழக மற்றும் புதுச்சேரி எல்லையான மடுக்கரையில் வசித்து கொண்டு அதே பகுதியிலுள்ள தனியர் பிளைவுட் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். சுராஜ்குமாருடன் பணி செய்யும் பப்பு என்பவருக்கும் சுராஜ்குமாரின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட சுராஜ்குமார் பப்புவுடன் சண்டையிட்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து பப்பு, சுராஜ்குமாரின் மனைவியுடனான உறவை கைவிடாததால் பப்புவை மது அருந்த மோட்சகுளம் எல்லையிலுள்ள புதியதாக போடப்பட்ட மனைபிரிவிற்கு அழைத்து சென்று இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது பப்புவுடன் சுராஜ்குமார் சண்டையிட்டு கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சுராஜ்குமார், பப்புவின் கழுத்தில் குத்தி கழுத்தை கிழித்து கொலை செய்துள்ளார். 

ரத்த வெள்ளத்தில் மிதந்த பப்பு சம்ப இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுராஜ்குமார் தனது மனைவிக்கு செல்போனில் அழைத்து பப்புவின் கழுத்தை கத்தியால் கிழித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் அலறி அடித்துகொண்டு வந்த சுராஜின் மனைவி சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுததை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் பப்புவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  வழக்கு பதிவு செய்து தலைமறைவான கொலை குற்றாவாளி சுராஜ்குமாரை தேடி வருகின்றனர்.