×

மாமனார் செய்த வேலைக்கு மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!!

 

ஆரணி அருகே கந்து வட்டிக் கும்பலிடம் மருமகன் சொத்தை மாமனார் அடமானம் வைத்ததால் ஆத்திரமடைந்த அவர், தனது மனைவியை அடித்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதாரம் ஊராட்சிக்குட்பட்ட வாரியார் நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி என்பவருக்கும், ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ஏழுமலை மகள் கலைச்செல்வி என்பவருக்கும் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யோகேஸ்வரி, ஹேமமாலினி, கௌரிசங்கர் ஆகிய இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் மூர்த்திக்கு பூர்வீகமாக ஆகாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளன.

இதனை அவருடைய மாமனார் ஏழுமலை என்பவர் தொழிலில் ஏற்பட்டதால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மருமகனின் சொத்தை ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த நபரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். அதனை அடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் வீடு வட்டி எதுவும் செலுத்ததால் என்று கடன் கொடுத்தவர் மூர்த்தியை மிரட்டியுள்ளனர். இது சம்பந்தமாக மூர்த்திக்கும் மனைவி கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இந்நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி மூர்த்தி மனைவி கலைச்செல்வியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்துவட்டி கொடுத்த சத்திவேல் உட்பட மூன்று நபர்களை காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
விசாரணைக்கு பின்பு அடமானம் வைத்த 2 ஏக்கர் விளை நிலம் மற்றும் வீடு ஆகிய சொத்தை அடமானத்தில் இருந்து மீட்டு அந்த மூன்று குழந்தைகளிடம் ஒப்படைப்பதாக காவல்துறையினர் உத்தரவாதம் கொடுத்தனர். ஒரு மாதம் ஆகியும் இன்னும் கந்து வட்டிக் கும்பலிடம் சொத்தை மீட்டு மூர்த்தியின் 3 குழந்தைகளுக்கு தராததால் ஆத்திரமடைந்த மூர்த்தியின் உறவினர்கள் மற்றும் ஆதாரம் ஊர் கிராம மக்கள் ஆரணி வந்தவாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் காவலர்கள் மூர்த்தியின் உறவினர்களிடம் சமரசம் பேசி, அனைவரையும் கலைத்தனர்.