"ஹஸ்பண்டு... ஹஸ்பண்டு".. இன்ஸ்டாவில் வைரலான KK Couple கணவர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!
ஹஸ்பண்டு... ஹஸ்பண்டு என கன்னியாகுமரி மாவட்ட பேச்சு வழக்கில் பேசி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட யுஷானி.இவர்
மலையாளம் கலந்த குமரி வட்டார வழக்கில், கணவருடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் trending couple வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர்.
இந்நிலையில் தனது கணவர் ஏபர் காட் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார் யுஷானி. தன்னிடம் கூடுதலாக ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியான தம்பதி உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா?
மகிழ்ச்சியான தம்பதியாக காட்டப்பட்டாலும், நிஜ வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது, இது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.