☰
×

கோர்ட் வளாகத்திலேயே மனைவியை வெட்டிய கணவன்

 

 

கன்னியாகுமரியில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கோர்ட் வளாகத்தில் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார். 

பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் மனைவி ஜெர்லின் பிரேமாவை அரிவாளால் வெட்டிய கணவர் வின்சென்ட் ராஜை தக்கலை போலீசார் கைது செய்தனர். தம்பதிக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. விவாகரத்து வழக்கு தொடர்பாக ஆஜராக வந்தபோது கணவன் வெறி செயலில் ஈடுபட்டுள்ளார். மனைவியின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு கணவன் தப்பியோடினார். தப்பியோடிய கணவனை மடக்கி பிடித்த வழக்கறிஞர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  பலத்த படுகாயமடைந்த மனைவி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.