×

"நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்" - அன்புமணி வலியுறுத்தல்!!

 

நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

கேரள மாநிலத்தில் தமிழகப் பெண் உட்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதில் ஒருவர் தர்மபுரியை சேர்ந்த பத்மா என்பது தெரியவந்துள்ளது.  நாகவல்லி அணை அருகே உள்ள எர்ரபட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கன் என்பவரின் மனைவி பத்மா நரபலி கொடுக்கப்பட்டுள்ளார். நரபலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடல் அழுகை நிலையில் இருப்பதால் அது பத்மாவா என்ன கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தது.  தற்போது பத்மாவின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊரான  எர்ரபட்டி  கிராமத்திற்கு கொண்டு வர வேண்டுமென அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.