×

‘இருளர் இன மாணவி மீது தாக்குதல்’.. மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விழுப்புரம் மாவட்டம் தி.பரங்கனி எனும் கிராமத்தில் வசிக்கும் மாணவி தனலட்சுமி இருளர் இனத்தை சேர்ந்தவர். இவர் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால் மேற்கொண்டு படிக்க சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு சாதி சான்றிதழ் கொடுக்கப்படவில்லையாம். இதனையடுத்து தனலட்சுமி அப்பகுதியை சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் பேராசிரியர் கல்விமணி உள்ளிட்டோரிடம் உதவி கேட்டுள்ளார். மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்படாதது சமூக வலைதளங்களில் வெகுவாக பரவியுள்ளது. இந்த தகவலை அறிந்து மாணவியின் வீட்டுக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், தனலட்சுமியின்
 

விழுப்புரம் மாவட்டம் தி.பரங்கனி எனும் கிராமத்தில் வசிக்கும் மாணவி தனலட்சுமி இருளர் இனத்தை சேர்ந்தவர். இவர் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால் மேற்கொண்டு படிக்க சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு சாதி சான்றிதழ் கொடுக்கப்படவில்லையாம். இதனையடுத்து தனலட்சுமி அப்பகுதியை சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் பேராசிரியர் கல்விமணி உள்ளிட்டோரிடம் உதவி கேட்டுள்ளார். மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்படாதது சமூக வலைதளங்களில் வெகுவாக பரவியுள்ளது.

இந்த தகவலை அறிந்து மாணவியின் வீட்டுக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், தனலட்சுமியின் படிப்பு செலவுக்கு பணம் கொடுத்து விட்டு அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார். அதனால் மாணவி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் போது 4 பேர், இவர் இருளர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை, எம்பிசி சான்றிதழ் தான் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக வாக்குவாதம் முற்றிய நிலையில், தனலட்சுமியை அவர்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த மனித உரிமை ஆணையம், இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.