×

விஷவாயு தாக்கி காஞ்சிபுரத்தில் இருவர் பலி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கடந்த 20 ஆம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் சாலையில் இருந்து கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் லட்சுமணன் மற்றும் சுனில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பேரையுமே விஷவாயு தாக்கியதால் அவர்கள் மயக்கமடைந்து கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் லட்சுமணன் மற்றும் சுனிலை சடலமாக மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த கூறியவர்கள் மீது
 

கடந்த 20 ஆம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் சாலையில் இருந்து கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் லட்சுமணன் மற்றும் சுனில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பேரையுமே விஷவாயு தாக்கியதால் அவர்கள் மயக்கமடைந்து கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் லட்சுமணன் மற்றும் சுனிலை சடலமாக மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறு தமிழகத்தில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து மனிதர்கள் உயிரிழப்பது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தது குறித்து விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லட்சுமணன் மற்றும் சுனில் உயிரிழந்தது குறித்து 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.