×

ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் மாதத்திலும் நீட்டிப்பு..!!

 

தென்மேற்கு ரயில்வே அறிவிப்பின்படி, ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் - ஹூப்பள்ளி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை காலம் வருகின்ற செப்டம்பர் மாதத்திலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள நேர அட்டவணை, நிறுத்தங்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும்.

வண்டி எண் 07355, ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், ஹூப்பள்ளியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயில், செப்டம்பர் மாதத்தில் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இதன் மூலம் கூடுதலாக 4 சேவைகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல், வண்டி எண் 07356 - ராமேஸ்வரம் - ஹூப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 8.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்பள்ளி சென்றடையும். இந்த ரயில், செப்டம்பர் மாதத்தில் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இதன்மூலம் மேலும் 4 சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன.

இந்த ரயில் கர்நாடக மாநிலத்தில்,

ஹாவேரி (HVR)

ராணிபென்னூர் (RNR)

ஹரிஹர் (HRR)

தாவங்கரே (DVG)

சிக்ஜாஜூர் சந்திப்பு (JRU)

பிரூர் சந்திப்பு (RRB)

அர்சிகெரே சந்திப்பு (ASK) - நீண்ட நிறுத்தம் (20 நிமிடங்கள்)

திப்தூர் (TTR)

துமகுரு (TK)

பானஸ்வாடி (BAND)

ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். அதேபோல தமிழ்நாட்டில்

ஓசூர் (HSRA)

தர்மபுரி (DPJ)

சேலம் சந்திப்பு (SA)

நாமக்கல் (NMKL)

கரூர் சந்திப்பு (KRR)

திருச்சிராப்பள்ளி (TPJ)

புதுக்கோட்டை (PDKT)

காரைக்குடி சந்திப்பு (KKDI)

சிவகங்கை (SVGA)

மானாமதுரை சந்திப்பு (MNM)

ராமநாதபுரம் (RMD)

ராமேஸ்வரம் (RMM)

ஆகிய நிறுத்தங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும் என தென்மேற்கு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தெற்கு ரயில்வே இணையதளத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் ராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு இந்த சேவை நீட்டிப்பு கூடுதல் பயண வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.