விஜய்யின் ஆலோசகரை தமிழக ஆளுநராக களமிறக்கும் பாஜக
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட விருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் விஜயின் ஆலோசகர்களில் ஒருவருக்கு மிகவும் வேண்டியவரான கிரண்குமார் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது புதிய ஆளுநர் நியமனம் பற்றி தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசிய செயற்குழு உறுப்பினருமான இவர், த்தில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தார். ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை சபாநாயகராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
கோனிதேட்டி ரோசையா பதவி விலகியதைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் 16வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தெலங்கானா பிரிவினை: ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலங்கானா உருவாக்கப்பட்டதை எதிர்த்து, 2014 பிப்ரவரியில் முதல்வர் பதவியையும் காங்கிரஸ் கட்சியையும் ராஜினாமா செய்தார். 2014 இல் 'ஜெய் சமைக்யாந்திரா' என்ற தனி கட்சியைத் தொடங்கினார். பின்பு 2018 இல் அப்பகுதியை விடுத்து மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் கேள்விக்குறியானதால், 2023 ஆம் ஆண்டில் தினமலர் செய்திகளின்படி பாஜகவில் இணைந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் ராஜம்பேட் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்