தமிழர்களை காட்டுமிராண்டிகள் என விமர்சித்தவர் பெரியார்- ஹெச்.ராஜா
Jan 14, 2025, 17:37 IST
தமிழ் மீதோ, தமிழர்கள் மீதோ, தமிழகத்தின் மீதோ ஈவெரா அவர்களுக்கும் அவரது வழித்தோன்றல்களுக்கும் ஒருபோதும் அக்கறையோ, அபிமானமோ இருந்தது கிடையாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹெச்.ராஜா தனது எக்ஸ் தளத்தில், “தமிழ் மீதோ, தமிழர்கள் மீதோ, தமிழகத்தின் மீதோ ஈவெரா அவர்களுக்கும் அவரது வழித்தோன்றல்களுக்கும் ஒருபோதும் அக்கறையோ, அபிமானமோ இருந்தது கிடையாது. அதனால் தான் ஈவெரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும்... தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றும் விமர்சித்தார்... அவரது கொள்கை வழித்தோன்றலான கருணாநிதி அவர்கள் தமிழன் சோற்றால் அடித்த முண்டம்! சொரணை இல்லாத பிண்டம்! என்று தமிழர்களை விமர்சித்தார்...