“விஜய் இன்னும் நல்லா படித்துவிட்டுவந்து விமர்சனம் செய்யணும்”- ஹெச். ராஜா
கோபியில் இந்து முன்னனி அமைப்பின் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைக்க கோபி வருகை தந்த பாஜக மூத்த தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ஹெச்.ராஜா, “திமுகவும், பாஜகவும் மறைமுக கூட்டணி என்று விஜய் எந்த அடிப்படையில் சொல்கிறார்? பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது, வைத்திருக்கிறது. 1999ல் பாஜகவுடன் திமுக வெளிப்படையாகத்தான் கூட்டணி வைத்திருந்தது. கல்விக் கொள்கையில் திமுகவை பின்பற்றும் விஜய் முதலில் அரசியலை படிக்க வேண்டும். 1974 ல் கச்சத்தீவை தாரை வார்க்கும் முன் காங்கிரஸ் சிந்தித்து இருக்க வேண்டும். ஆதரித்த காங்கிரசிற்கும் திமுகவிற்கும் கள்ள உறவு உள்ளதா எனக்கு விஜய் பதில் சொல்லட்டும். காங்கிரஸை ஏன் விஜய் கண்டிக்கவில்லை? கொஞ்சமாவது விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு விஜய் பேச வேண்டும்” - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா
இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்கா வரி விதித்துள்ளது.இதற்கு எதிர் நடவடிக்கையாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை இந்தியர்கள் தவிர்த்து, சுதேசிப் பொருட்களையே வாங்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது பொருளாதார நடவடிக்கையால் மட்டுமே என்பதால் அமெரிக்க பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.