×

ஜனநாயகன் லீக்கானது எப்படி?- வெளியான பகீர் தகவல்

 

அரசியல் கட்சிக்கும், படம் லீக் செய்யப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தனது கடைசி படம் என அறிவித்து நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், படத்தில் ராணுவம் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி, சென்சார் போர்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக படத்துக்கு சான்று வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, படத்துக்கு உடனடியாக சான்று வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.ஆனால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய பட தயாரிப்பு தரப்பு, தனி நீதிபதி முன் நிலுவையில் இருந்த வழக்கை திரும்பப்  பெற்றது.சென்சார் போர்டின் மறு ஆய்வு குழு ஆய்வில் படம் இருந்தது. இதனிடையே சமீபத்தில் ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானது.

இந்நிலையில் ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிக்கும், படம் லீக் செய்யப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் Freelance படத்தொகுப்பாளர் எடிட்டிங்கில் இருந்து படத்தை திருடியுள்ளார், நெருங்கிய நண்பர்களுக்கு படத்தை பகிர்ந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.