×

ஊரடங்கின்போது நிவாரணமாக வழங்கியது எவ்வளவு? – தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே மாதம் தளர்வு வழங்கப்பட்டாலும், மீண்டும் ஜூன் மாதம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு
 

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே மாதம் தளர்வு வழங்கப்பட்டாலும், மீண்டும் ஜூன் மாதம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரசி மற்றும் ரூ.1000ம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.