×

விமான டிக்கெட் கட்டணம் வாடகை குறைகிறது : எவ்வளவு தெரியுமா?

 

விமான பயணிகளுக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் ஒரு நல்ல செய்தி உள்ளது. எகானமி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு 12 சதவிகிதம் ஆக இருந்த ஜிஎஸ்டி, இப்போது 5 சதவிகிதமாக ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு 18 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டி, 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விமான பயண செலவுகளை குறைக்கும். இதன் மூலம் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக சென்னை - பெங்களூரு, சென்னை - மதுரை, சென்னை - கோவைக்கு தினமும் அதிகளவில் பயணிகள் விமானத்தில் பயணம் செய்து வருகிறார்கள். ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலமாக விமான டிக்கெட்டுகள் விலை 5 சதவிகிதம் வரை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.