ஆகஸ்ட்டில் இத்தனை படங்கள் ரிலீஸா? திரை ரசிகர்களுக்கு செம ட்ரீட்
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆகஸ்ட் மாதம் முதல் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ள புதிய திரைப்படங்களின் அட்டவணை வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஆர். மாதவன் நடிக்கும் ‘G.D.N’ மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘DC’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. ஆகஸ்ட் 14 அன்று சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’, கவின் - நயன்தாரா நடிக்கும் ‘ஹாய்’ ஆகிய திரைப்படங்களும், ஆகஸ்ட் 21 அன்று ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் இன் லீலா’ படமும் வெளியாகவுள்ளன. தொடர்ந்து ஆகஸ்ட் 26-இல் யாஷின் ‘டாக்ஸிக்’ மற்றும் ஆகஸ்ட் 28-இல் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளன.
செப்டம்பர் மாதத்தைப் பொறுத்தவரை, செப்டம்பர் 4-இல் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘இம்மார்ட்டல்’, செப்டம்பர் 10-இல் சூரியின் ‘மண்டாடி’ மற்றும் கார்த்தியின் ‘சர்தார் 2’, செப்டம்பர் 11-இல் அருள்நிதியின் ‘டிமான்ட்டி காலனி 3’, செப்டம்பர் 25-இல் ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ மற்றும் தர்ஷன் - ராம்குமார் நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’ ஆகிய படங்கள் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன.
அக்டோபர் மாத வெளியீடுகளாக, அக்டோபர் 1-இல் பாரத்தின் ‘மிஸ்டர் பாரத்’ மற்றும் நிவின் பாலி - சூரியின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. மேலும், அக்டோபர் 15 அன்று ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான ‘ஜெயிலர் 2’ திரைப்படமும், அக்டோபர் 16 அன்று தனுஷ் - மம்மூட்டி நடிக்கும் ‘OM’ திரைப்படமும் திரையரங்குகளை அலங்கரிக்கவுள்ளன.
இதுதவிர, விஷாலின் ‘மகுடம்’, ரவி மோகனின் ‘கராத்தே பாபு’, விஷ்ணு விஷாலின் ‘இரண்டு வானம்’, பிரபுதேவாவின் ‘மூன்வாக்’, பேசில் ஜோசப் - லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘ராவடி’, அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’, சித்தார்த்தின் ‘ரவுடி & கோ’, சந்தீப் கிஷனின் ‘சிக்மா’, கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் நடிக்கும் ‘சத்யவான் சாவித்திரி’ மற்றும் கதிரின் ‘ஆசை’ ஆகிய படங்கள் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதிக்காகக் காத்திருக்கும் பட்டியலின் கீழ் இடம்பெற்றுள்ளன.