×

பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?

 

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான அட்டவணை குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதியை கல்வித்துறை அறிவித்து வருகிறது. இந்த நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது இயல்பானதே.

தற்போது கணக்கிட்டு பார்க்கும்போது, முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அரசு விடுமுறை மற்றும் அதனை ஒட்டியுள்ள வார இறுதி நாட்கள் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 8 நாட்கள் வரை தொடர்ச்சியான விடுமுறை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஜூன் மாத பள்ளி விடுமுறை நாட்கள்

ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம். ஜூன் 26ம் தேதி வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை மட்டுமே அரசு விடுமுறையாக வருகிறது. வார விடுமுறை கணக்கில் எடுத்துக்கொண்டால் சனி, ஞாயிறு என மொத்தம் 8 நாட்கள் விடுமுறை வருகிறது.அதுமட்டுமல்லாமல் பள்ளி திறப்பு ஜூன் 4ம் தேதி வருவதால் 1, 2, 3 என மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. மொத்தமாக பார்த்தால் ஜூன் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை வருகிறது