×

மனம் நொந்துபோன வி.எஸ்.பாபு- உடல்நிலை எப்படி இருக்கிறது?

 

தவெக வி.எஸ்.பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த செப்.9ம் தேதி முதல் சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மூச்சுத்திணறல் காரணமாக அட்மிட் செய்யப்பட்டிருக்கும் வி.எஸ்.பாபு, கடந்த சில மாதங்களாக மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, "நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்த்து காரைக்குடியில் வென்ற டி.கே.பிரபு அமைச்சராகிவிட்டார். பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்திரராஜனை மயிலாப்பூரில் வென்ற வெங்கட்ரமணன் அமைச்சராகிவிட்டார். ஆனால், முன்னாள் முதல்வர் ஸ்டாலினைத் தோற்கடித்தும் உங்களை அமைச்சராக்கவில்லையே, ஏன்..." என்று கட்சி நிர்வாகிகள் வி.எஸ்.பாபுவைக் குடைந்தெடுத்திருக்கிறார்கள். அதிலேயே அவரது மனம் நொந்துபோய் சோர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.சட்டமன்றக் கூட்டத்தொடர் சமயத்தில், கொளத்தூர் தொகுதியின் வளர்ச்சி குறித்து கலந்தாலோசனை நடத்திய முதல்வர் விஜய்யிடம், தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார் வி.எஸ்.பாபு. 'இதையெல்லாம் என் கவனத்துக்கே யாரும் கொண்டு வரவில்லையே...' என்று முதல்வரும் விசனப்பட்டிருக்கிறார். 


இந்நிலையில் தவெக வி.எஸ்.பாபுக்கு செப்.9ஆம் தேதி திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர், சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவரது மருத்துவ நிலைகள் சீராகவும் திருப்திகரமாகவும் உள்ளதாகவும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல முறையில் ஒத்துழைப்பு நல்குவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.