×

கேஸ் தீர்ந்துபோவதை எப்படி கண்டுபிடிப்பது..? கேஸ் சிலிண்டரை மிச்சம்ப்படுத்த ஈஸி டிப்ஸ்..!

 

கேஸ் சிலிண்டர் தற்போது அனைவரது வீட்டிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மக்களின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப கேஸ் சிலிண்டரின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சனிக்கிழமையன்று ஒரே நாளில் சிலிண்டரின் விலை சுமார் ரூ.60 வரை உயர்ந்தது. இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டு உபயோக சிலிண்டரான LPG மற்றும் உணவகங்களில் உபயோகிக்கப்படும் வணிக சிலிண்டர்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பெங்களூருவில் உணவகங்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. கூடவே, தமிழ்நாட்டின் சில உணவகங்கள் தோசை, ஆம்லெட் கிடையாது என்று போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. 

எனவே, கேஸ் சிலிண்டர் மிச்சப்படுத்துவது தான் தற்போது இல்லத்தரசிகளின் ஒரே குறிக்கோளாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்தலாம்.


கேஸ் தீர்ந்துபோவதை எப்படி கண்டுபிடிக்கலாம்? 

முதலில், ஒரு பெரிய பருத்தி துணியை எடுத்து தண்ணீரில் நனைத்து, சிலிண்டரைச் சுற்றி நன்றாகத் துடைக்க வேண்டும். பின்னர், 10 நிமிடங்களுக்குப் பிறகு சிலிண்டரை சரிபார்க்கவும். உலர்ந்த பகுதி உலராத பகுதி என இரண்டின் அளவையும் சரிபார்க்க வேண்டும். உலர்ந்த பகுதியானது, சிலிண்டரில் எஞ்சியிருக்கும் வாயுவின் அளவை உங்களுக்கு காட்டும். உலராத பகுதி அது முடிவடையும் நிலையில் உள்ளதைக் குறிக்கும்.


கேஸ் சிலிண்டரை மிச்சம்ப்படுத்த டிப்ஸ்கள் :

  • சிலிண்டர் மிச்சப்படுத்த அதை ஆன் செய்வதற்கு முன் முதலில் சிம்மில் வைத்துக் கொள்ளவும். பிறகு ஆன் செய்யவும். ஏனெனில் பாத்திரத்தின் அடிப்பகுதிக்குள் மட்டுமே தான் நெருப்பு ஏறியனும். அதற்கு மேல் எறியும்படி வைக்க கூடாது. இல்லையெனில் அதிகளவு கேஸ் வீணாகும்.
  •  நான் ஒரு நாளைக்கு 2-4 முறையாவது பாலை சூடுப்படுத்துகிறோம். அப்படி பழைய சூடு படுத்தும்போது ஒரு சுத்தமான குழி கரண்டியை அதனுள் போட்டு வையுங்கள் இப்படி நீங்கள் செய்யும் போது பால் பொங்கி வழியாது. கேஸும் வீணாகாது. முக்கியமாக சிம்மில் வைத்து எப்போதுமே பாலை காய்ச்சவும். இதனால் நிறைய கேஸ் சேமிக்க முடியும்.
  • இறைச்சி, பருப்பு வகைகளை வேக வைப்பதற்காக அதிக விசிலில் வைக்க வேண்டியிருக்கும். ஆனால் அப்படி வேகவைக்கும் முன் ஒரு சின்ன கொட்டாங்குச்சியை கழுவி குக்கருக்குள் போடவும். இப்படி செய்தால் சீக்கிரமே அவைகள் வெந்துவிடும். அதிக அளவு கேஸ் மிச்சமாகும்.
  • கேஸ் அடுப்பில் சமைக்கும்போது கிச்சன் ஜன்னல் திறந்து வைக்க வேண்டாம். அதுபோல அருகில் இருக்கும் ஃபேனையும் ஆப் செய்யவும். இதனால் நெருப்பு அலையானது பாய்ந்து கேஸ் வீணாக வாய்ப்பு உள்ளது.
  • சமைக்கும் முன் சமைக்கக்கூடிய எல்லா பொருட்களையும் சுலபமாக எடுக்கும்படி அருகில் வைத்துக் கொள்ளுங்கள் இதனால் நேரம் வீணாகாது. கேஸ்சும் வீணாவது தடுக்கப்படும்.
  • நீங்கள் சமைக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதி தட்டையாக பறந்து விரிந்து இருந்தால் அதிகமான கேஸ் செலவாகாது. அதுவே குழியாக இருந்தால் கண்டிப்பாக நிறைய கேஸ் செலவாகும். எனவே சமைக்கும் பாத்திரத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
  • ஈரத்துடன் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சமைக்கும் போது அந்தத் தண்ணீர் வற்றுவதற்கு நேரம் எடுக்கும். எனவே துடைத்துவிட்டு பிறகு பாத்திரத்தை பயன்படுத்தவும்.
  • சிறிதுசிறிதாக உணவை நீங்கள் அடிக்கடி சமைக்கும்போது, அதிகளவில் கேஸை பயன்படுத்தி சமைக்க வேண்டியிருக்கும். இதுவே நீங்கள் அதிகமாக உணவு சமைக்கும்போது, ​​பல சிறிய உணவுகளை சமைப்பதை விட வாயுவை மிகவும் திறமையாகப் பயன்படுத்தலாம். மீதமுள்ள உணவை குளிர்சாதன பெட்டியில் சேமித்து, பின்னர் அவற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடலாம்.
  • தனித்தனியாக அரிசி, பருப்பு, காய்கறி என்று வேக வைக்காமல் செப்பரேட்டரில் வைத்து குக்கரை பயன்படுத்தினால் எரிபொருள் மிச்சமாவதுடன் சமையலையும் எளிதில் முடிக்கலாம். இதனால் 2, 3 முறை குக்கரை கழுவ வேண்டிய அவசியமும் இருக்காது.
  • மிளகாய், மல்லி போன்ற மசாலா பொருட்களை நன்றாக வெயிலில் காய வைத்து அரைத்தால் அடுப்பில் சூடாக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆதலால் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.    
  • ஆட்டோமேட்டிக் ரைஸ் குக்கர், இன்டக் ஷன் ஸ்டவ் போன்றவற்றை அவ்வப்பொழுது பயன்படுத்தினாலும் எரிபொருள் மிச்சமாகும்.
  • அளவுக்கு அதிகமாக சமையல் செய்யாமல், தேவையான அளவு செய்வது, தேவையான அளவு தண்ணீர் விட்டு சமைப்பது, தேவையான அளவுக்கு அதிகமாக தீய்த்து எடுப்பது போன்றவற்றை தவிர்த்தாலும் எரிபொருள் மிச்சமாகும்.
  • சாதம் சமைக்க அடுப்பில் தண்ணீர் வைக்கும்பொழுது அதற்கு மேல் இன்னொரு பாத்திரத்திலும் தண்ணீர் வைத்தால் கீழே இருக்கும் தண்ணீரும் நன்றாக சூடாகி விடும். அந்த சுடு நீரை மீண்டும் சிறிது நேரம் கொதிக்க வைத்து குடிநீராக பயன்படுத்தலாம். இதனாலும் எரிபொருள் மிச்சமாகும்.
  • பாரம்பரிய அரிசி, பருப்பு வகைகளை நன்றாக ஊற வைத்து குக்கரில் சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.
  • முக்கியமாக, ஃபிரிட்ஜில் இருந்து எதையாவது சூடாக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே வெளியே எடுத்து வைத்து சூடுபடுத்துவதால் எரிபொருள் மிச்சமாகும்.
  • ஆவி அடங்குவதற்கு முன் அவசரமாக குக்கரின் வெயிட்டை தூக்கி விட்டு அதை திறக்க முயற்சிப்போம். அப்பொழுது குக்கரின் உள்ளே அழுத்தம் இருப்பதால் தீயை அணைத்தாலும் உள்ளே இருக்கும் வெப்பநிலை மாறாது. அதனால் உணவுப்பொருள் கூடுதலாக வேகும். அப்படி வெந்து ஆவி அடங்கிய பின் எடுத்தால்தான் உணவு நன்றாக வெந்திருக்கும். திரும்பத் திரும்ப சூடு செய்ய வேண்டிய தேவை இருக்காது. இதனாலும் எரிபொருள் மிச்சமாகும்.
  • பாத்திரத்தில் சாதம் சமைப்பவர்கள் உலை கொதிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவ வேண்டும். இதனால் உலை கொதித்து வெளியே வழியாமல் இருக்கும்போது அடுப்பில் அடைப்பு ஏற்படாது. இதனாலும் சீக்கிரமாக சாதம் வடித்து எரிபொருளை மிச்சமாக்கலாம்.
  • நீங்கள் பயன்படுத்தும் பாத்திரம் மற்றும் பொருட்களின் அளவுடன் பொருந்தக்கூடிய பர்னரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், பெரிய பர்னர் ஒரு சிறிய பானை அல்லது பாத்திரத்தை சூடாக்க அதிக வாயுவைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே சரியான அளவைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். நீங்கள் சமைக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப பர்னரை சிறிதாகவும் பெரிதாகவும் பயன்படுத்த வேண்டும்.சுத்தமான பர்னர் வேகமான வெப்பத்தை வெளியிடும். உங்கள் பர்னரில் அடைப்பு போன்று ஏதாவது பிரச்சனை இருந்தால், வெப்பம் சரியாக வெளிவராது. இதனால், உணவு சமைக்க அதிக நேரம் எடுக்கும். அதிகளவு கேஸ் இதனால் பயன்படுத்த வேண்டியிருக்கும். சுத்தமான பர்னரை நீங்கள் பயன்படுத்தும்போது குறைந்த வாயு மட்டுமே செலவாகும். எனவே, பர்னரை நல்ல நிலையில் வைத்திருக்க, அதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
  • சமைக்கும் போது, உங்கள் உணவு முழுவதுமாக சமைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் பர்னரை அணைக்க வேண்டும். அதில் இருக்கும் மீதமுள்ள வெப்பம் சமையல் செயல்முறையை முடித்து வாயுவைச் சேமிக்கும். இதன் மூலம் சிலிண்டர் கேஸை நீங்கள் சேமிக்கலாம்.
  • நீங்கள் சமைக்கும் போது, பானை அல்லது பாத்திரத்தை மூடி வைத்து சமைக்க வேண்டும். இது வெப்பம் மற்றும் நீராவியைப் பிடிக்கும் என்பதால், விரைவில் உங்கள் உணவு வெந்துவிடும். இதில் குறைவான அளவு மட்டுமே கேஸ் செலவாகும். குறைந்த வாயுவைப் பயன்படுத்தி உணவை விரைவாகவும் திறமையாகவும் சமைக்கலாம்.