×

வெளியான முக்கிய தகவல் : டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

 

டெல்லி  கார் வெடிப்பு சம்பவத்திற்கு எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், அதற்கான காரணத்தைக் கண்டறிய அங்குலம், அங்குலமாக விசாரணை அமைப்புகள் புலனாய்வு செய்து வருகின்றன. முதற்கட்டமாகக் கார் வெடிப்பு சம்பவத்திற்கு அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் மற்றும் வெடிக்கும் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அம்மோனியம் நைட்ரேட் சாதாரண நிலையில் வெடிக்காது, அதே நேரத்தில் பெட்ரோலியம் அடிப்படையிலான எரிபொருளுடன் இணைந்த நிலையில், டெட்டனேட்டர்கள் மூலம் தூண்டப்படும்போது வேதிவினை நிகழ்ந்து, அது பயங்கரமான வெடிக்கும் பொருளாக மாறுகிறது. Ammonium-Nitrate Fuel-Oil பொதுவாக 94 சதவிகிதம் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் 6 சதவிகிதம் எரிபொருள் எண்ணெயைக் கொண்டுள்ளது.

அம்மோனியம் நைட்ரேட், Ammonium-Nitrate Fuel-Oil-ஆக இருக்கும்போது, சாதாரணமாக அதனை வெடிக்க முடியாது, அதற்கென்று ஒரு ஆற்றல், தூண்டுதல் தேவைப்படுகிறது. அந்தப் பணியைத்தான் டெட்டனேட்டர்கள் அல்லது வெடிபொருட்கள் செய்கின்றன.. டெட்டனேட்டர்களால் தூண்டப்படும்போது, நைட்ரஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீராவி என ஒரு நொடியில் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு, பயங்கரமாக வெடிப்பதோடு, கார்பன்-மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களையும் வெளியேற்றுகிறது.இதனால்தான் அதன் வீரியம் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. 

முதற்கட்ட விசாரணையில் டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் தற்கொலைப்படை பயங்கரவாத தாக்குதலோடு ஒத்துப்போகிறது.