பெரியாரை இழிவாக பேசிவிட்டு எப்படி எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள்?- சீதாலட்சுமியிடம் வாக்குவாதம்
பெரியாரை இழிவாக பேசிவிட்டு எப்படி எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள்.? என ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் திமுக பெண் நிர்வாகி கேள்வி எழுப்பினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி அன்னை சத்யா நகர் பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடமும் அவர் தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரை நிறுத்தி தனக்கு வாக்களிக்க வேண்டும் என சீதாலட்சுமி வேண்டுகோள் விடுத்த போது, வாகனத்தில் வந்த அந்த பெண் பெரியாரைப் பற்றி பேசிவிட்டு எப்படி இந்த பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
வாகனத்தில் வந்த பெண் சசிகலா அந்த பகுதியின் திமுக மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.