கோவிலுக்குள் எப்படி ஒரு நாயை அழைத்துக் கொண்டு செல்லலாம்..? த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவால் வெடித்த புதிய சர்ச்சை..!
விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறி இருப்பவர் த்ரிஷா.அதற்கு காரணம் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என விஜய் மனைவி சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறி உறவில் இருப்பதாக கூறியிருந்தார். இந்த விவகாரத்தில், த்ரிஷாவின் பெயர் ரசிகர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வந்தது.
என்ன தான் த்ரிஷா மற்றும் விஜய்க்கு எதிரான கருத்துக்கள் நிறைவு வந்தாலும் அதை இரண்டு பேருமே சைலண்டாக கடக்கிறார்கள்.அதை பற்றி எதுவும் பேச மறுக்கின்றனர். இந்த பிரச்சினை வந்ததிலிருந்து திரிஷா என்ன செய்தாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முக்கியமாக, அவர் வைக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏதேனும் மறைமுகமாக உணர்த்துகிறாரா என்றும் உற்று நோக்குகின்றார்கள்.
இந்த நிலையில், தற்போது திரிஷா வளர்த்து வரும் ஒரு நாயை அனுமன் ஜெயந்தியான ஏப்ரல் இரண்டாம் தேதி அனுமன் கோவிலுக்கு அழைத்து சென்று வழிபாடு நடத்தினார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தையும் த்ரிஷா பகிர்ந்து தனது செல்லப்பிராணி முதல் முறையாக கோவிலுக்கு வருவதாக பதிவிட்டு இருந்தார்.பக்தர்கள் கோவில்களில் எப்படி ஒரு நாயை அழைத்துக் கொண்டு செல்லலாம் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
செல்லப்பிராணியை முதல் முறையாக கோவிலுக்கு வந்துள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில், திரிஷா பகிர்ந்துள்ள அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர் அந்த புகைப்படத்தை அதாவது செல்லப்பிராணியுடன் காருக்குள் அமர்ந்தபடி எடுத்துக் கொண்டதாகத்தான் தெரிகிறது.