×

இல்லத்தரசிகள் ஷாக்..! சத்தத்தை நெருங்கும் ஒரு கிலோ தக்காளி விலை.! 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயை தாண்டியது. வெங்காயத்தின் விலையும் 130 ரூபாயை தொட்டது. இதனால் இந்த இரண்டு காய்கறிகளையும் வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் தவித்த நிலையில் தான் விளைச்சல் அதிகரித்த காரணத்தால் காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்தது. 

இதனையடுத்து ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலையும் சரிந்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் தற்போது மக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தக்காளி விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சிறிது சிறிதாக அதிகரித்த விலை தற்போது 70 முதல் 80 ரூபாயை தொட்டுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு தக்காளி பெட்டி 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதனால் இல்லத்தரசிகள் குறைவான அளவை தக்காளியை வாங்கி வருகிறார்கள். விலை உயர்வு தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.மேலும் மழையின் காரணமாக போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் வரும் நாட்களில் மழையின் பாதிப்பை பொறுத்து தக்காளி விலை இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.