இல்லத்தரசிகள் ஷாக்..! சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்வு..!!
தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நெல்லையில் வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168 வரை விற்பனையாகிறது. இதேபோல் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட பல்லாரி வெங்காயத்தின் விலையும் ரூ.80 வரை உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய மொத்த விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னை வெளி மார்க்கெட்டுகளில் வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து வரும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.36-க்கும், பெரிய வெங்காயம் ரூ.42-க்கும் விற்பனையாகிறது. கர்நாடகாவிலிருந்து வரும் சின்ன வெங்காயம் ரூ.38-க்கும், பெரிய வெங்காயம் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாசிக் சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது.
தீபாவளிக்கு பிறகு புதிய வெங்காயம் அறுவடைக்கு வரத் தொடங்கும்.. புதிய வெங்காயம் சந்தைக்கு வரும்போது, மொத்த வரத்தும் அதிகரித்து, வெங்காயத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.அதனால் தீபாவளிக்கு முன்பு விலை ஓரளவு குறையுமா, நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் உயருமா என்பதுதான் இப்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி.