×

இல்லத்தரசிகள் ஷாக்..! மீண்டும் புதிய உச்சத்தில் முட்டை விலை.!

 
நாமக்கல் மண்டலத்தில் சமீப நாட்களாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 635 காசுகளாக இருந்து வந்தது.

இந்த நிலையில், நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், முட்டை கொள்முதல் விலை 640 காசுகளாக அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் கோழி பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது.

முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவை அதிகரிப்பு காரணமாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரை முட்டை கொள்முதல் விலை அதிகரித்து காணப்படும் என்றும், அதன் பின்னர் விலை குறைய வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.