×

ஓசூர்- பைக் திருடிய 2 பேர் கைது – குற்றவாளிகளை பிடிக்க உதவிய சமூகவலைத்தளம்!

ஓசூர் தொடர் வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை சமூக வலைதள உதவியுடன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஓசூர் நகரில், பல்வேறு பகுதியில் தொடர்ந்து புல்லட் மற்றும் பல்சர் ஆகிய உயர்வகை பைக்குகள் திருடப்பட்டு வந்துள்ளன. இதுகுறித்து பல்வேறு புகார்களை பெற்ற ஓசூர் போலீசார் விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில், தனது வாகனத்தை பறிகொடுத்த ராம்ஜி என்பவர், தனது பேஸ்புக் மறறும் டிவிட்டர்
 

ஓசூர்

தொடர் வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை சமூக வலைதள உதவியுடன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓசூர் நகரில், பல்வேறு பகுதியில் தொடர்ந்து புல்லட் மற்றும் பல்சர் ஆகிய உயர்வகை பைக்குகள் திருடப்பட்டு வந்துள்ளன. இதுகுறித்து பல்வேறு புகார்களை பெற்ற ஓசூர் போலீசார் விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில், தனது வாகனத்தை பறிகொடுத்த ராம்ஜி என்பவர், தனது பேஸ்புக் மறறும் டிவிட்டர் பக்கத்தில் வாகனத்தின் படங்களை பதிவிட்டு உதவி கோரியிருந்தார். அந்த பதிவினை பார்த்த ஒருவர் திருடுபோன அவரது இருசக்கரவாகனம் இருக்கும் இடம் குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்த தகவலின் பேரில், ஓசூர் போலீசார் திருப்பத்தூர் மாவட்டம் வேப்பம்குப்பம் மற்றும் ஆம்பூர் பகுதிகளில் விசாரணை நடத்தி, இரு சக்கர வாகன திருடர்கள் இரண்டுபேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 புல்லட் வாகனமும், 2 பல்சர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

சமுக வலைத்தளத்தின் உதவியுடன் ஒருவரது வாகனத்தை கண்டுபிடிக்க முயன்றபோது, 11 பேரின் இருசக்கரவாகனங்கள் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.