காலையில் நடந்த கோர விபத்து.. 2 பேர் உடல் கருகி பலி..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் சுங்கச்சாவடி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. இந்த மோதலில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததில் சம்பவ இடத்திலேயே வேலு (27), தருமபுரியை சேர்ந்த திருப்பதி (30) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் சுங்கச்சாவடி அருகே எதிர் எதிரே வந்த இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு பைக்கிலும் தீப்பற்றி எரிந்தது. மளமளவென பற்றி எரிந்த இந்த தீயில், ஒரு பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மற்றொரு பைக்கில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீப்பற்றி எரிந்த வாகனங்களில் ஏராளமான செல்போன்கள் இருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மர்மம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.