இனி கேஸ் வேண்டாம்... தண்ணீரில் அடுப்பெரிக்கலாம்! HONC GAS ரகசியம்
நெருப்பை நீரை கொண்டு அணைப்பது வழக்கம் ஆனால் தமிழர் ஒருவர் அந்த நீரிலிருந்து நெருப்பை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தண்ணீரில் இருந்து மாற்று எரிசக்தியை கண்டுபிடித்து உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சேலம் மாவட்டம் பேலூரை சேர்ந்த ராமலிங்கம் கார்த்திக். இவர் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைன் பிரித்து அதன் மூலம் மாற்று எரிசக்தியை உருவாக்கி இருக்கிறார். மீடியா , விளம்பர துறையை சேர்ந்த கார்த்திக் ராமலிங்கம் எலக்ட்ரானிக்ஸ் படிப்பை முடித்து 20 ஆண்டுகளாக தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம் நீரை எரிபொருளாக மாற்றி இதன் மூலம் கேஸ் அடுப்பு மட்டுமின்றி வாகன் இயக்கம் , ஜெனரேட்டர், மின்சாரம் என அனைத்தையும் நீரிலிருந்தே மாற்ற முடியும் எனத் தெரிவிக்கும் ராமலிங்கம் கார்த்திக், தனது கண்டுபிடிப்பு தொடர்பாக மத்திய அரசை அணுகியுள்ளதாகவும் விரைவில் தம் கண்டுபிடிப்புக்கான உரிமம் கிடைக்கப்பெற்று ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.மேலும் இயற்கை தந்த இந்த அரிய பொக்கிஷமான தண்ணீரில் இருந்து ஏன் நாம் எரிசக்தியை உருவாக்க முடியாது என எனக்கெழுந்த கேள்வியே தனது கண்டுபிடிப்புக்கான உந்துதல் என தெரிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு இந்தியாவுக்கான பெருமை என்றும் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை பார்த்து இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக பேசியுள்ளதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்பிக்கை உள்ளது. 4 வது பொருளாதார நாடாக உள்ள நம் இந்திய நாடு இந்த கண்டுபிடிப்பை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தாக் இந்தியா பொருளாதார அளவில் முன்னேற்றம் அடையும். உலக சந்தையை மாற்றியமைக்கும் சக்தியாக இந்த கண்டுபிடிப்பு மாறும் என்றார் ராமலிங்கம் கார்த்திக். உலகப்பயன்பாட்டில் ஹைட்ரஜன் தேவை அதிகமாக இருக்கின்ற நிலையில் இதுவரை ஹைட்ரஜனை வாங்கி அதிலிருந்துதான் பேட்டரி பயன்பாடு உள்ளது என்றும் ஹட்ரஜனை உருவாக்கி அதனை எரிபொருளாக மாற்றும் சக்தியாக கண்டுபிடித்துள்ள இந்த கண்டுபிடிப்பு உலகத்தை திரும்பி பார்க்க வைக்கும் கண்டுபிடிப்பு என்றால் மிகையல்ல.