×

இளைஞரை மிரட்டி ஓரினசேர்க்கை- வீடியோ எடுத்து ரசித்த கும்பல்

 

மணப்பாறையில் வாலிபரை மிரட்டி ஓரினசேர்கையில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த 6 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 27). ஐடி ஊழியரான இவர், புத்தாநத்தத்திலிருந்து மணப்பாறைக்கு தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அதே பேருந்தில் மணப்பாறை வண்டிப்பேட்டை தெருவைச் சேர்ந்த அறிவழகன் (வயது 27) என்பவரும் சென்றுள்ளார். இந்நிலையில் அறிவழகன் தன் நண்பர்களுக்கு போன் செய்து தியாகராஜன் தன்னிடம் பிரச்சனை செய்து விட்டதாகவும், அனைவரும் மணப்பாறை மதுரை ரோட்டில் உள்ள ஒரு குளத்திற்கு வரும் படியும் கூறி உள்ளார்.

அதன்படி 5 பேர் அங்கு வரவே பஸ்சில் இருந்து தியாகராஜனை அழைத்துக் கொண்டு குளத்தில் வைத்து அவரை சேதுரெத்தினபுரம் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 24) என்பவருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் ஓரினசேர்கையில் ஈடுபட்டதை வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து விடுவோம் என்று கூறி மிரட்டி உள்ளனர். மேலும் தங்களுக்கு 75 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் தியாகராஜனை மிரட்டி உள்ளனர். இதனால் பணத்தை அனுப்பிய தியாகராஜன் சம்பவம் குறித்து மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவழகன், முகமது ரியாஸ், மஸ்தான் தெருவை சேர்ந்த அருண் குமார், லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்த லியோ பிளாய்டு, மணப்பாறைபட்டியை சேர்ந்த மயில் என்ற செந்தில் குமார், நேருஜி நகரை சேர்ந்த யுவராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இதில் கைதாகி உள்ள முகமது ரியாஸ் மற்றும் மயில் என்ற செந்தில் குமார் ஆகிய இருவரும் ஏற்கனவே பள்ளி மாணவிகள் இருவரிடமும் பாலியல் வன்புறுத்தல் செய்து போக்சோ சட்டத்தில் கைதாகியது குறிப்பிடத்தக்கது.