×

மக்கள் நடமாட்டத்தை மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும்- மத்திய அரசு

இதுவரை உலகம் முழுவதும் 76 லட்சத்து 41 ஆயிரத்து 384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 24 ஆயிரத்து 845 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 38 லட்சத்து 66 யிரத்து 795 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

இதுவரை உலகம் முழுவதும் 76 லட்சத்து 41 ஆயிரத்து 384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 24 ஆயிரத்து 845 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 38 லட்சத்து 66 யிரத்து 795 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2,97,535 லிருந்து 3,01,579 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,49,767 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,553 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்திலுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அந்த நிலையை அடையாமல் இருக்க தீவிர நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பேருந்துகள், லாரிகள் போன்றவை தவிர பிற வாகனங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.