×

கொரோனா தொற்று இருப்பவர்களுக்கான வீட்டில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,982பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,342பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நுண்கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது அறிகுறி இருப்பவர்களுக்கான வீட்டில், அவர்களை பராமரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து சென்னை மாநகராட்சி
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,982பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,342பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நுண்கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது அறிகுறி இருப்பவர்களுக்கான வீட்டில், அவர்களை பராமரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து சென்னை மாநகராட்சி சில குறிப்புகளை கொடுத்துள்ளது.

அவை பின்வருமாறு :-

1. நோய்வாய்ப்பட்டவர் அதிக நீர் ஆகாரம் மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்யவும்.

2. நோய்வாய்ப்பட்டவரோடு ஒரே அறையில் இருக்கும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவும். பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை முறையாக அப்புறப்படுத்தவும்.

3. அடிக்கடி சானிடைசர் அல்லது சோப்பு போட்டு கைகளை குறைந்தது 20 விநாடிகள் தண்ணீரால் கழுவ வேண்டும். முக்கியமாக :

4. நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த பிறகு

உணவு சமைப்பதற்கு முன் சமைக்கும் பொழுதும், சமைத்த பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

நோய்வாய்ப்பட்டவருக்கென தனி பாத்திரம், துணி, படுக்கை விரிப்பு, ஆகியவை பயன்படுத்தவும். பயபடுத்திய பொருட்களை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவ வேண்டும்.

5. உடல் நலம் சரியில்லாதவர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களை சானிடைசர் போட்டு நன்கு துடைக்க வேண்டும்.

6. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ அணுக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.