×

தொடர் விடுமுறை..! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!  

 

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 5ஆம் தேதி ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. வெள்ளி, சனி,ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை வருவதால் ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராக இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவலின்படி, ரயில் எண் (06136) தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஏப்ரல் 2ஆம் தேதியான நாளை இரவு 11.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் ஏப்ரல் 3ஆம் தேதி காலை 11.00 மணிகு தென்காசிக்கு சென்றடைகிறது.  இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. 

மேலும், ஏப்ரல் 5ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை ஏப்ரல் 6ஆம் தேதி 10.45 மணிக்கு தாம்பரத்திற்கு சென்றடைகிறது.  இந்த ரயிலும் செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, நெல்லை, தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடைகிறது. 

மேலும், யஷ்வந்த்பூர் - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ஏப்ரல் 2ஆம் தேதியான நாளை  காலை 11.50 மணிக்கு றப்பட்டு, மறுநாள் காலை 3 மணிக்கு சென்றடைகிறது. மேலும், மறுமார்க்கத்தில் ஏப்ரல் 3ஆ தேதி காலை 8.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் 9.30 மணிக்கு சென்றடைகிறது.  இந்த ரயில் யஷ்வந்த்பூர், குனிகல், ஹாசன், சக்லேஷ்பூர், கம்பகாபுத்தூர், மங்களூரு, காசர்கோடு, பையனூர், கண்ணூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு ரயில்வே திருச்சி - பெங்களூரு இடையே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 7.14,21,28ஆம் தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு  பெங்களூரு சென்றடைகிறது. மொத்தம் 4 சேவைகள் மட்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் பெங்களூரு - திருச்சி ரயில் ஏப்ரல் 7,14,21,28ஆம் தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. இந்த ரயிலில் 2 ஏசி சேர் கார் பெட்டிகள், 8 சிட்டிங் சேர் கார், 6 இரண்டாம் வகுப்பு பெட்டிகள். 1 முதல் வகுப்பு பெட்டிகள் ஆகியவை உள்ளன. இந்த ரயில் கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட், கிருஷ்ணாராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.