×

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..! 

 

குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, திருவள்ளூர் தினம், சுதந்திர தினம், வள்ளலார் நினைவு நாள், மஹாவீர் ஜெயந்தி, உழைப்பாளர் தினம், மிலாடி நபி ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைளுக்கு ஆண்டுதோறும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.  அண்மையில் தான், மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முனனிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.   

தொடர்ந்து,  இன்று (மே 4) அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று  (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

மே 1ஆம் தேதி மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், உரிமம் பெற்ற கிளப்புகள் அனைத்தும் மே 1ஆம் தேதி மூடப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த அறிவிப்பை மீறி மது கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், தமிழகத்தில் மே 4ஆம் தேதியான இன்று அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்.    

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 85 சதவீதம் வாககுகள் பதிவானது.  இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதியான இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8  மணிக்கு தொடங்குகிறது.   

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பிறகு மின்னணு எந்திரத்தின் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை வெளியிடும். எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தான், டாஸ்மாக் கடைகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.