×

#BREAKING சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் 6 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது, சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தேவைப்பட்டால் புனே மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னைக்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார்.