×

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு  அக். 6 ஆம் தேதி விடுமுறை 

 

இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு  அக்டோபர் 6 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். அடுத்த வாரம் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர். 

இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு  அக்டோபர் 6 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.