17 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!
Oct 22, 2025, 09:29 IST
வட கிழக்கு பருவ மழை தீவிமடைந்து வருவதால், கடலுார் மாவட்டத்தில் பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டு விழுப்புரம், தஞ்சை , கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் ,திருவள்ளூர் , ராணிபேட்டை என ஓன்பது மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கும்இன்று ( அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல், மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.