நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Jun 13, 2025, 18:50 IST
மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகள் விடுமுறையாக உள்ள நிலையில், தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.