×

அடிச்சது ஜாக்பாட்... அதிரடியாக சரிந்த தங்கம் விலை - சவரன் எவ்வளவு தெரியுமா?

 

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக தங்கத்தின் விலையில் தினசரி பெரியளவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் விற்கப்பட்ட நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்து ரூ.13 ஆயிரத்திற்குள் வந்தது.சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு உயர்ந்ததும், தங்கத்தின் விலை குறைய காரணமாக இருந்தது.

இந்நிலையில், இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,120 குறைந்து ரூ.1,10,480க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 ரூ.13,810 க்கு விற்கப்படுகிறது.

அதே போல கடந்த சில நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்றும் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.255,000க்கு விற்கப்படுகிறது