×

வரலாறு காணாத வாக்குகள்! தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக GKM தமிழ்குமரன் தேர்வு..!

 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு (TFPC) மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதை முன்னிட்டு, 2026-2029-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று (பிப்ரவரி 22, 2026) விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . இதுவரை நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் பெற்றுள்ளார்.

அதே போல பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். rewrite