தீபத்தூணில் காலணி அணிந்து ஆய்வு செய்த தொல்லியல் துறை: இந்து மக்கள் கட்சி கண்டனம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் காலணி அணிந்து ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், தமிழக அரசு தன்னுடைய கட்டுபாட்டில் இருக்கும் தமிழக தொல்லியல் துறையை இத்தனை நாள் கழித்து என்ன காரணத்திற்கு ஆய்வு செய்ய அனுப்பியது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆய்வு என்ற பெயரில் தீபத்தூணில் உள்ள ஆவணங்களை அழிப்பதற்காக தான் தமிழக அரசு தொல்லியல் துறையை அனுப்பியதா? என்ற பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுகிறது என கூறியுள்ள அவர், தமிழக தொல்லியல்துறை மலையை ஆய்வு செய்வதற்கு உயர்நீதிமன்றத்தில் ஏதேனும் அனுமதி பெற்றார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
காலணி அணிந்து தீபத்தூணை ஆய்வு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.