☰
×

நவம்பர் 18ம் தேதி திருப்பரங்குன்றம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது - ஹிந்து முன்னணி அறிவிப்பு..!

 

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை, பல ஆண்டுகளாக அரசு தடுத்து வருகிறது. இதற்காக ஹிந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. கடந்தாண்டு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, நீதிமன்றத்தில் வெளியானபோதும், அரசு தீபம் ஏற்றவில்லை. தீபமேற்ற வலியுறுத்தி, இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில், 'ஒன்று கூடுவோம்; சஷ்டி பாடுவோம்' என்ற தலைப்பில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடைபெறுகிறது.

வரும் 18ம் தேதி மாலை 4:00 மணிக்கு திருப்பரங்குன்றம், 16 கால் மண்டபம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அரசு தீபம் ஏற்றும் என நம்புகிறோம். வரும், 24ம் தேதி கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றும் நிகழ்வைக் காண்போம்.

இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.