☰
×

நவ., 14-ல் வீடுகளில் விளக்கேற்ற ஹிந்து முன்னணி அழைப்பு..!!

 

திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி கோட்டச் செயலாளர் அரசு பாண்டி, நிர்வாகிகள் மாணிக்க மூர்த்தி, ராஜமதன் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற கடந்தாண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை மதிக்காமல் தீபத்துாணில் தீபம் ஏற்ற தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை தடை விதித்தது. தீபம் ஏற்றுவது சம்பந்தமான வழக்கு நவ., 17ல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தற்போதைய நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மலை மீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் இல்லை.

எனவே நவ., 24 திருக்கார்த்திகை திருநாள். அன்று தீபத்துாணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள அனைத்து முருக பக்தர்களும் நவ., 14 மாலை 6:00 மணிக்கு வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி பாராயணம் செய்ய தீர்மானித்துள்ளோம்.

அன்று பக்தர்கள் தவறாமல் வீடுகளில் விளக்கேற்றி முருகப்பெருமானை அழைக்க சஷ்டி பாராயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினர்.