×

‘பாஜகவின் தந்திரங்கள் தமிழகத்தில் எடுபடாது’ – இந்து என்.ராம் பேட்டி!

பாஜகவின் நடவடிக்கைகள் ஏதும் தமிழகத்தில் பலிக்காது என இந்துக்குழும வெளியீட்டு நிறுவன இயக்குநர் என்.ராம் விமர்சித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் நுழைய பல தந்திரங்களை கையாண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அவர்கள் வரவே முடியாது. ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை’ என்று கூறினார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு நிகழ்வும் அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆளும் அரசான
 

பாஜகவின் நடவடிக்கைகள் ஏதும் தமிழகத்தில் பலிக்காது என இந்துக்குழும வெளியீட்டு நிறுவன இயக்குநர் என்.ராம் விமர்சித்துள்ளார்.

உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் நுழைய பல தந்திரங்களை கையாண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அவர்கள் வரவே முடியாது. ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை’ என்று கூறினார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு நிகழ்வும் அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆளும் அரசான அதிமுகவுடன் கைகோர்த்திருக்கும் பாஜக தமிழகத்தில் காலூன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்பதே வரும் சட்டமன்றத்தேர்தலில் பாஜகவின் குறிக்கோளாக இருக்கிறது. இதனை எதிர்நோக்கி, தீவிர செயல்பாடுகளில் ஈடுபடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாகவே அமித்ஷாவின் சென்னை பயணம் அமைந்தது. அரசு முறை பயணமாக சென்னை வந்த அவர், தேர்தலுக்கான பிள்ளையார் சுழியை போட்டு விட்டுச் சென்றார்.

அமித்ஷா மீண்டும் சென்னை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் அவரது பயணம் தடை பட்டது. இந்த சூழலில் தான் இன்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று சென்னை வந்து கொரோனா தடுப்பூசி ஒத்திகையை பார்வையிட்டார். இவ்வாறு சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பாஜக பல்வேறு செயல் திட்டங்கள் தீட்டியிருக்கும் நிலையில், என்.ராம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.