#BJP பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
Apr 14, 2024, 11:31 IST
2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
"மோடி கேரண்டி" என அச்சிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:
- முத்ரா கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்
- இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் தொடரும்.
- குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் .
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.
- 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
- பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும்.
- 2025ஆம் ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினமாக அறிவிக்கப்படும்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும்.