×

55 ஆண்டு கால நாமக்கல் பண்ணை வரலாற்றில் உச்சபட்ச விலை..!

 
முட்டை விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாமக்கல் கோழிப் பண்ணை வரலாற்றில் முதன்முறையாக முட்டை கொள்முதல் விலை ரூபாய் 6.20 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ரூபாய் 6.15-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது.

முட்டை கொள்முதல் விலை ரூபாய் 6.20 ஆக உயர்ந்துள்ளது. 55 ஆண்டுகால பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச கொள்முதல் விலை என்பது குறிப்பிடத்தக்கது. சில்லறை விலையில் 1 முட்டை ரூபாய் 8 வரை விற்க வாய்ப்புள்ளது. இந்த லேட்டஸ்ட் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளில் கேக், பிஸ்கட், பேக்கரி வகைகள், இனிப்புகள் தயாரிப்பதில் முட்டை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதால், அதன் தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே முட்டை விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.